ஒலிம்பிக்கில் ஆடவர்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா நாட்டின் வீரர் உசேன் போல்ட் பந்தயத் தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆடவர்களுக்கான 100 மீ ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலையிலுள்ள ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் கலந்து கொண்டார்.அவருடன் சக நாட்டு வீரரான யோகன் பால்கே மற்றும் பாவல் அசேஃபா, அமெரிக்க வீரர்களான ஜஸ்டின் கேட்லின், டைசன் கே, ரியான் பைலே, நெதர்லந்து நாட்டு வீரரான சாரண்டி மார்ட்டினா, திரிலந்த் அண்ட் டோபாக்கோ நாட்டைச் சேர்ந்த ரிச்சர்டு தாம்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் ஜமைக்கா நாட்டின் வீரர் உசேன் போல்ட் பந்தயத் தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். பால்கே யோகன் இரண்டாவது இடத்தையும், கேட்லின் ஜஸ்டின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
-B.R.Viswanadhan
