லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்திருக்கிறார் ககன் நரங். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரான 29 வயதான ககன் நரங் சென்னையில் பிறந்தவர். 2010ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் காமென்வெல்த் போட்டியில் இருந்து விலகுவதாக முதலில் அறிவித்தார். சமரசத்துக்குப் பிறகு காமென்வெல்த் போட்டியில் கலந்துகொண்ட ககன் 4 தங்கப் பதக்கங்களை வென்றார். 2011ஆம் ஆண்டு அவருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது
-இணைய செய்தியாளர் - A.R.Viswanadham