இந்தியா – இங்கிலந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தியா பேட்டிங் தேர்வு

   ங்கிலந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிகை தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியில் சேவாக், கம்பீர், புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் அனுபவ வீரர் ஜாகீர்கான், உமேஷ் யாதவுடன், சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதேபோல் அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலந்து அணியில், டிராட், கெவின் பீட்டர்சன், இயான் பெல், மோர்கன், பட்டேல்  ஆகிய அனுபவ பேட்ஸ்மேன்களுடன், அறிமுக வீரர் நிக் காம்ப்டனுடன் இடம்பெற்றுள்ளார்.
தற்போது இந்திய அணியின் பேட்டிங்கை துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் கம்பீர் இணைந்து  தொடங்கினர். ஆரம்பம் முதலே சேவாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
-விஸ்வநாதன்