ஆஸ்திரேலிய -- தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட்
கிரிக்கெட் போட்டி ட்ராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பென்
நகரில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி
450 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்
இழப்புக்கு 487 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி கடைசி நாளான
செவ்வாய்கிழமை தொடர்ந்து விளையாடியது.
சதமடித்து அசத்திய ஹசி, சரியாக 100 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 565 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளெர் செய்தது. க்ளார்க் 259 ரன்களுடனும், மேத்யு வேட் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிக்க அணி, ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

-விஸ்வநாதன்