தோனியின் தலைமையால், இந்திய கிரிக்கெட் அணி வளர்ச்சிப் பாதையை நோக்கி



      இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளைப் பெற்றிருப்பது எளிதானது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
   தோனியின் தலைமையால், இந்திய கிரிக்கெட் அணி வளர்ச்சிப் பாதையை நோக்கி, மேலும் பயணிக்கும் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
   ஹைதராபாத் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற புதிய சாதனையை தோனி படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இதுவரை 45 போட்டிகளுக்கு இந்திய அணியை வழிநடத்தி உள்ள அவர், 22 வெற்றிகள், 12 தோல்விகள் மற்றும் 11 போட்டிகளை டிரா செய்துள்ளார்.
   2009, 2010 ஆகிய ஆண்டுகளில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிக்கு, தோனி கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி, 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 வெற்றிகளையும், 13 தோல்விகளையும், பெற்றுள்ளது. சவுரவ் கங்குலி தலைமையில் 15 போட்டிகள் டிரா ஆனது.