நியுசிலந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தோல்விகளை சந்திருந்த இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 438 ரன்கன் எடுத்தது.
அடுத்து விளையாடிய நியுசிலந்து, முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு சுருண்டது. ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி, நான்காவது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. மெக்கல்லமும், வில்லியம்சன்னும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். மெக்கல்லம் 42 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 52 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியுசிலந்து அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸிலும், இரண்டாவது இன்னிங்ஸிலும் தலா 6 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர் அஷ்வினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது . இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களுரில் வரும் 31-ந்தேதி பெங்களுரில் தொடங்குகிறது.
-சத்தீஸ்