ஐ.பி.எல் தொடரிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை பி.சி.சிஐ நீக்கியது செல்லும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் திண்டாடிய டெக்கான் சார்ஜர்ஸ் டெக்கான் அணி
நிர்வாகத்தை, 100 கோடி ரூபாய் உத்தவாத தொகை அளிக்க மும்பை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது . ஆனால் உரிய காலத்தில் இந்த தொகையை கட்ட தவறியதால்,
டெக்கான் அணியை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்குவதற்கு முடிவு
எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெக்கான் சார்ஜர்ஸ் தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனு
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.டி தனுகா, முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. பின்னர், குறிப்பிட்ட காலத்தில் வங்கி உத்தரவாத தொகையை செலுத்தாத
பிசிசிஐ-யின் நடவடிக்கை சரியானதே என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. டெக்கான்
சார்ஜர்ஸ் செய்திருந்த மனுவையும் தள்ளுபடி செய்த்து.
இதனைத்தொடர்ந்து அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, இந்தூர், ஐதராபாத்,
கான்பூர், கொச்சி, நாக்பூர், நொய்டா, ராஜ்கோட், ராஞ்சி மற்றும்
விசாகப்பட்டினம் ஆகிய 12 நகரங்களை தலைமையிடமாக கொண்டு டெண்டர்
சமர்பிக்கலாம் என்று அறிவித்திருந்த பிசிசிஐ-யின் நடவடிக்கை விறுவிறுப்பு
அடைந்துள்ளது.
B.R.விஸ்வநாதன்
B.R.விஸ்வநாதன்