லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
வென்ற ராணுவ வீரர் விஜயகுமாருக்கு, சிறந்த பாதுகாப்பு படை விளையாட்டு வீரர்
விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கில், 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில்
பங்கேற்ற விஜயகுமார் 30 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனையடுத்து16-வது டோக்ரா ரெஜிமண்டில் சுபேதராக பணிபுரிந்து வந்த
விஜயகுமார், கடந்த ஆகஸ்ட் மாதம் சுபேதர் மேஜராக பதவி உயர்வு பெற்றார்.
ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படையில் பணியாற்றும் விளையாட்டு
வீரர்களில் 2012ம் ஆண்டுக்கான சிறந்த பாதுகாப்பு படை விளையாட்டு வீரராக
விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருதும், ஒரு லட்சம்
ரூபாய் ரொக்கப்பரிசையும் கடற்படை முதன்மை அட்மிரல் ஜோஷி வழங்கினார்.
இது குறித்து அவர், தான் பணியாற்றும் பாதுகாப்பு படையிலிருந்து
பாராட்டும், கவுரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக
தெரிவித்துள்ளார்.