கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்தில் ஹர்பஜனுக்கு பின்னடைவு

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் வீரர்களின் ஒப்பந்தத்தை புதுப்பித்து வருகிறது. வீரர்களின் ஆட்டத்திறனைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர்.
அதன் அடிப்படையில் வீரர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.  A  கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடியும், B கிரேடு வீரர்களுக்கு 50 லட்சமும், C கிரேடு வீரர்களுக்கு 25 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த முன்னணி வீர்ர்களான ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் ஏ கிரேடில் இருந்து பி கிரேடுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பி கிரேடில் இருந்து ஏ கிரேடுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.