அபுதாபி கிராண்ட் ஃப்ரி ஃபார்முலா ஒன் கார் பந்தய தகுதிச்சுற்று போட்டியில் பிரிட்டன் வீரர் லூயிஸ் ஹமில்டன் முதல் இடம் பிடித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நகரில் நடந்த இந்த 18-வது சுற்றில்,
முன்னணி வீரர்களின் கார்கள் காற்றை கிழித்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
அப்போது பந்தய இலக்கை நோக்கி வீரர்கள் வேகமாக விரைந்து சென்ற காட்சி
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த தகுதிச்சுற்று போட்டியில், நடப்பாண்டின் சாம்பியன் ஜெர்மனியின்
செபாஸ்டியன் வெட்டலை பின்னுக்கு தள்ளி, மெக்லரேன் அணியின் பிரிட்டன் வீரர்
லூயிஸ் ஹமில்டன் ஒருமணி நேரம் 40 நிமிடம் 63 வினாடிகளில் பந்தய இலக்கை
முதலாவதாக கடந்தார்.
ஆஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பர் இரண்டாவது இடம் பிடித்தார்.
இந்தாண்டில் தொடர்ந்து 4 வெற்றிகளை ஜெர்மனியின் செபாஸ்டின் வெட்டல் 3-வது
இடமே பிடித்தார். நடப்பாண்டோடு ஓய்வை அறிவித்துள்ள ஜெர்மனியின் மைக்கேல்
சூமாக்கர் 14-வது இடத்தையே பிடித்ததால் கார்பந்தய ரசிகர்கள் ஏமாற்றம்
அடைந்தனர்.
