சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு ரூ. 2கோடி மானியம் : தமிழக அரசு உத்தரவு

     சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ஒரு கோடி ருபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கிராம மக்களிடையே விளையாட்டு போட்டிகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க  செய்யும் வகையில், ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு 25 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளுக்கு இந்த தொகை தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
அதோடு முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டேபிள் டென்னிஸ், இறகுபந்து, நீச்சல், டென்னிஸ் போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும்  இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் முன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-விஸ்வநாதன்