இங்கிலந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி இன்று அறிவிப்பு

  ங்கிலந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படுகிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு அணியை தேர்வு செய்கிறது.
பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங், நீண்ட மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரகானேவுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலந்து அணி, 4 டெஸ்ட், இரண்டு 20 ஓவர்கள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.
-விஸ்வநாதன்