இந்திய ஜூனியர் ஹாக்கி அணி வெற்றி

    லேசியாவில் நடைபெற்று வரும் ஜோஹர் சுல்தான் கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை முதல் லீக் போட்டியில் இந்தியா எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணியும் கோல் எதையும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 49வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார் சுக்மன்ஜித். கடைசி நிமிடத்தில் இந்தியாவின் முன்கள ஆட்டக்காரர் அமொன் மிராஷ் மற்றொரு கோல் அடிக்க, இந்திய அணி இரண்டு – பூஜ்ஜியம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் கோல் முயற்சிகளை அபாரமாக தடுத்த கோல் கீப்பர் சுஷாந்த் டர்க்கி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் ஆண்டாக நடைபெறும் ஜோஹர் சுல்தான் கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, நியுசிலந்து, பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
-விஸ்வநாதன்