ஐ.பி.எல் போட்டிகளில் நிதி முறைகேடு நடந்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு
நடத்தி வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என
ஐ.பி.எல்.முன்னாள் தலைவர் லலித் மோதி கூறியுள்ளார்.
தான் சட்டவிரோதமாக இங்கிலந்தில் தங்கியிருக்கவில்லை என்றும், ஊழல்
குற்றச்சாட்டுகளால் தனக்கு தனிப்பட்ட விதத்தில் எந்த பாதிப்பும் இல்லை
என்றும் லலித் மோதி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளை நடத்தியதில்
கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக லலித் மோதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மத்திய அமலாக்க பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில்
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்திய கொண்டு
வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நிதியமைச்சகம், வெளியுறத்துறை
அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் அரசை அனுகி,
லலித் மோதியை இந்திய கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை
அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார்.
-சத்திஷ் K. K.K.nagar