இங்கிலந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி இந்திய அணி அபார வெற்றி

         இந்திய- இங்கிலந்து அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்திய- இங்கிலந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டிவெண்டி-20 போட்டி, புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலந்து அணியின் துவக்க வீரர் லம்ப் ஒரு ரன்னில் அஸ்வீன் பந்தில் வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹெலேஸ்- ரைட் இணை, இந்திய பந்துவீச்சை சிதறடித்து, அபார ரன்குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடியை யுவராஜ் சிங் அபாரமாக பிரித்தார். ரைட்டை 34 ரன்களிலே வெளியேற்றிய அவர், ஹெலேசையும் 56 ரன்களில் அவுட்டாக்கினார்.
20 ஓவர் முடிவில் இங்கிலந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் யுவராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்கள் காம்பீர் 16 ரன்களிலும், ரஹேனே 19 ரன்களிலும் கோஹ்லி 21 ரன்களிலும் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங், 21 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் அவுட்டானார்.
கேப்டன் தோனியின் சிறப்பான பங்களிப்பினால் 17.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. வரும் 22-ம் தேதி, மும்பையில் இரண்டாவது இருபது ஓவர் போ
-விஸ்வநாதன்