4-வது டெஸ்ட்: இங்கிலந்து அணி நிதான ஆட்டம்

       ந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலந்து அணி நிதானமாக விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலந்து அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.27 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலந்து அணி இன்று நாக்பூரில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற, இங்கிலந்து கேப்டன் அலீஸ்டர் குக், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அஸ்வீன், ஓஜா, பியூஸ் சாவ்லா ஆகிய சுழற்பந்து மும்மூர்த்திகளுடன், ரவீந்தர ஜடேஜாவும் அறிமுக வீரராக களமிறங்கினார். ஆரம்பத்திலேயே அனல் கக்கிய இசாந்த் சர்மா, துவக்க வீரர் காம்டன் விக்கெட்டை வீழ்த்தி, இங்கிலந்தின் விக்கெட் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பின்னர் கேப்டன் குக்-கையும் 1 ரன்னில் எல்.பி.டபுள்யு முறையில் அவுட்டாக்கி அவர் அதிர்ச்சி அளித்தார். பின்னர் டிராட்- பீட்டர்சன் ஜோடி சேர்ந்தனர். டிராட் 44 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து இயன் ரொனல்ட் பெல் களமிறங்கியுள்ளார். 55.5 ஓவர்களில் இங்கிலந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சன் 61 ரன்களுடனும், பெல் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- R.விஸ்வநாதன்