ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, வீனஸ் வெற்றி


   ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்னில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீராங்கனை ஓல்க புச்கோவா-வை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஷரபோவா, 6-0, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் கஜகஸ்தானின் கலினா-வுடன் மோதினார். இதில், வீனஸ் வில்லியம்ஸ் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
                             -விஸ்வநாதன்